go2top
இயக்கத்தில் இணையுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் என்பது தொழில்துறை வழங்குநர்களுக்கு சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் சில்லறை விற்பனைக்கான தங்க முதலீட்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்திய தங்க தொழில்துறையின் முயற்சியாகும். பல்வேறு வணிக வகைகளுக்கான நடத்தை நெறிமுறைகளின் உதவியுடன் வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் தலைமையிலான இந்திய தங்கத் தொழில்துறையில் உள்ள பல்வேறு தலைவர்களின் உதவியுடன் தங்க பயனாளிகள் மத்தியில் நம்பிக்கையை மேம்படுத்த இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் சில்லறை விற்பனைக்கான தங்க முதலீட்டு கொள்கைகளின் வழிகாட்டும் கொள்கைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது மற்றும் இவைதான் நடத்தை நெறிமுறைகளின் அடிப்படையை அமைக்கிறது.

இந்திய தங்கத் தொழில்துறை ஒன்றாக இணைந்து கட்டமைக்கப்பட்ட மற்றும் நன்கு வழிகாட்டப்பட்ட முறையில் செயல்படுவதன் மூலம் மட்டுமே வளர முடியும். தங்கம் வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே அதிக நம்பிக்கையை வளர்க்க நடத்தை நெறிமுறைகள் முக்கியமானவை. நடத்தை நெறிமுறையை ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்படுத்துவது, அதிக தேவை மற்றும் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கும், இது சந்தையை வளர்க்க உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த இந்திய தங்கத் தொழிலுக்கு பயனளிக்கக்கூடியதாகும்.

ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான், இந்திய தங்கத் தொழில்துறையின் முக்கிய உறுப்பினர்களுடன் இணைந்து வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலால் உருவாக்கப்பட்டது. மேலும் அறிய இங்கு படிக்கவும்

நடத்தை நெறிமுறை பல்வேறு வகையான வணிகங்களுக்கு உயர்தர செயல்பாட்டு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடத்தை நெறிமுறைகளில் அனுபவம் சார்ந்த நடைமுறைகள், கூடுதல் சிறந்த நடைமுறைகள் மற்றும் சிறந்த செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கும்.

நடத்தை நெறிமுறை ஒவ்வொரு வணிக வகைகளுக்கும் தனிப்பட்ட தொழில் பணிக்குழுக்களால் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குழுவில் அந்தந்த வணிகங்களின் தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் அடங்கியுள்ளனர், அவர்கள் நடத்தை நெறிமுறைகளை. கொண்டு வருவதற்கான சவால்கள் மற்றும் இடைவெளிகளைப் புரிந்துகொள்கிறார்கள். இவை வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் சில்லறை விற்பனைக்கான தங்க முதலீட்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.

நடத்தை நெறிமுறைகளை தங்கத் தொழில்துறை வழங்குநர்கள் ஏற்றுக்கொள்வது அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும், இது தங்க நுகர்வோரிடையே நம்பிக்கையையும் நாணயத்தையும் ஏற்படுத்தும் . இது தங்கத் தொழில் நன்கு வளர்ந்து விரிவடைவதற்கு உதவும்.

ஒட்டுமொத்த இந்திய தங்கத் தொழிற்துறையும் நடத்தை நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு, கட்டமைக்கப்பட்ட முறையில் செயல்படத் தொடங்கும்போதுதான் ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் வெற்றி பெற முடியும். இணையதளத்தில் உள்ள உள்நுழைவு படிவத்தில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்து உள்நுழைவதன் மூலம் நீங்கள் அபியான் திட்டத்தில் பங்கேற்கலாம். உங்கள் விவரங்களை பகிர்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்